2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

கொரோனா பரவலுக்கு மத்தியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா இன்று நடைபெற உள்ள நிலையில், அது குறித்து விரிவாக பார்க்கலாம்...
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு
x
கொரோனா பரவலுக்கு மத்தியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா இன்று நடைபெற உள்ள நிலையில், அது குறித்து விரிவாக பார்க்கலாம்...உலக நாடுகள் சங்கமிக்கும் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக்....கடந்த ஆண்டு கொரோனாவால் தடைபட்ட டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பானில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றன.இதில் பங்கேற்பதற்காக 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு குழுவினர் டோக்கியோவில் உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.இந்திய நேரப்படி இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா தொடங்க உள்ளது. 68 ஆயிரம் பேர் அமரக்கூடிய ஜப்பான் தேசிய மைதானத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, சுமார் 950 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  தொடக்க விழாவில், ஜப்பான் அரசர் நருஹிட்டோ, அந்நாட்டு பிரதமர் யோஷிஹிடே சுகா, அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.தொடக்க விழாவின்போது ஜப்பானின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் பல அரங்கேற்றப்பட உள்ளன.தொடக்க விழாவை தொடர்ந்து நடைபெறும் நாடுகளின் அணிவகுப்பில், முதல் நாடாக ஒலிம்பிக்கை தோற்றுவித்த கிரீஸும், இறுதி நாடாக போட்டியை நடத்தும் ஜப்பானும் பங்கேற்க உள்ளன. கொரோனா அச்சத்தால் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், இந்திய தரப்பில் 6 அதிகாரிகள் உள்பட சுமார் 30 பேர் கொண்ட குழுவே தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளது.தொடக்க விழா அணிவகுப்பில், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகிய இருவரும் தேசியக் கொடியை ஏந்திச் சென்று அணிவகுப்பை வழிநடத்த உள்ளனர்.2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 125 வீரர்-வீராங்கனைகள் 18 விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் 3 பதக்கங்கள், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 6 பதக்கங்கள், 2016 ரியோ ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் என இதுவரை 28 பதக்கங்களை கடந்த காலங்களில் வென்றுள்ள இந்தியா,...இந்த முறையாவது, ஒரே ஒலிம்பிக்கில், இரட்டை இலக்கங்களில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எல்லோரது ஏகோபித்த  எதிர்பார்ப்பாக உள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்