த்ரில் வெற்றியுடன் தொடரை வென்ற இந்தியா - பிரிஸ்பேனில் முதன்முறையாக தோற்ற ஆஸி.
மிகவும் மோசமான தோல்வி, அபார வெற்றி, அருமையான ஆட்டம் என இந்திய டெஸ்ட் வரலாற்றில் மறக்க முடியாத தொடராக அமைந்துள்ளது நடந்து முடிந்துள்ள ஆஸ்திரேலிய தொடர்.... ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் வெற்றிக்கதையை தற்போது பார்க்கலாம்...
மிகவும் மோசமான தோல்வி, அபார வெற்றி, அருமையான ஆட்டம் என இந்திய டெஸ்ட் வரலாற்றில் மறக்க முடியாத தொடராக அமைந்துள்ளது நடந்து முடிந்துள்ள ஆஸ்திரேலிய தொடர்.... ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் வெற்றிக்கதையை தற்போது பார்க்கலாம்...அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முன்னிலை பெற்றாலும், இரண்டாவது இன்னிங்ஸில் வரலாற்றில் மறக்க முடியாத மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது இந்திய அணி. வெறும் 36 ரன்களில் ஆட்டமிழக்க, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த போட்டியுடன் இந்தியாவின் நம்பிக்கையான கோலி விடைபெற, போதாத குறையாக முகமது ஷமியும் காயத்தால் விலகினார்.பந்துவீச்சில் பும்ரா, அஸ்வினை பெரிதும் நம்பிய ரகானே, தந்தையை இழந்த சோகத்தில் வாய்ப்புக்காக ஏங்கியிருந்த சிராஜிற்கும், இளம் வீரர் சுப்மன் கில்லுக்கும் மெல்போர்ன் டெஸ்ட்டில் வாய்ப்பு வழங்கினார்.அறிமுக போட்டியிலேயே இருவரும் சிறப்பாக செயல்பட, பும்ரா, அஸ்வின் அபார பந்துவீச்சு, பேட்டிங்கில் ரகானேவின் சதம், ரவீந்திர ஜடேஜாவின் அரைசதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியை வென்றது இந்திய அணி.அடுத்தது சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஹிட்மேன் ரோகித் அணிக்கு திரும்ப, பேட்டிங் வலுபெற்றது. முதல் நான்கு நாட்கள் இரண்டு அணிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்த, 5வது நாள் ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக்கொண்டது.407 ரன்கள் இலக்கை நோக்கி புஜாரா நங்கூரம் போட்டு நிலைத்து நின்று ஆட, பண்ட் அதிரடியாக விளையாடி இந்தியாவை வெற்றியை நோக்கி நகர்த்தினார்.இருப்பினும் பண்ட் புஜாரா அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டிரா செய்ய முடிவு செய்த இந்திய அணிக்கு, கடுமையான தடுப்பாட்டத்தால் நம்பிக்கை அளித்தது விஹாரி - அஸ்வின் ஜோடி.அஸ்வினுடன் இணைந்து காலில் தசைபிடிப்புடன் விடாமல் போராடிய விஹாரி சுமார் 43 ஓவர்கள் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் போட்டியை டிராவிற்கு அழைத்து சென்றார்.4வது போட்டி தொடங்குவதற்கு முன்னரே பும்ரா அஸ்வின் காயத்தால் விலக,தமிழக வீரர்கள் நடராஜன் வாஷிங்டன் சுந்தர் என முழுக்க முழுக்க இளம் பந்துவீச்சாளர்களை நம்பி களமிறங்கியது.இந்திய அணி. ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் நடராஜன் சிறப்பாக பந்துவீச,பேட்டிங்கில் தடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்ததனர் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சர்துல் தாக்கூர் ஜோடி இருவரது அரைசதத்தால் நல்ல ஸ்கோரை பதிவு செய்த இந்திய அணி. சுமார் ஒரு மாதம் நீடித்த இந்த தொடருக்கு முடிவு கடைசி நாளின் வந்து நின்றது. 329 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு சுப்மன் கில் அசத்தலாக விளையாடி 91ரன்கள் சேர்க்க, நங்கூரம் போட்டு நிலைத்து விளையாடினார் புஜாரா.கடைசி கட்டத்தில் ஒருநாள் போட்டி சேஷிங் போன்று திக் திக் திக் என நகர்ந்த இந்த போட்டியை, அருமையாக கையாண்ட ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. கடந்த போட்டியில் ஆட்டமிழந்தாலும், இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு அழைத்து சென்று சூப்பர் ஸ்டாராக ஜொலித்தார் பண்ட்.காயம். முன்னணி வீரர்கள் இல்லை. இனவெறி தாக்குதல், வசைபாடுதல் என முன்னால் வந்த தடைகளை எல்லாம் உடைத்து எறிந்து, நம்பிக்கையுடன் பயணித்த இந்திய அணிக்கு மிகப்பெரிய பரிசாக கிடைத்துள்ளது பார்டர் கவாஸ்கர் கோப்பை.
Next Story