"வணக்கம் டா மாப்ள" தோற்றத்தில் வார்னர் - சமூக வலைதளங்களில் வார்னரின் சேட்டைகள்
ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான வார்னர் தன் குறும்புத்தனத்தால், தென்னிந்தியா முழுவதும் கிரிக்கெட்டே தெரியாதவர்களை கூட ரசிகர்களாக பெற்றுள்ளார்..
எனக்கு கிரிக்கெட்டே தெரியாது... ஆனால் நான் உங்கள் ரசிகராகிவிட்டேன்... ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னரின் சமூக வலைதள பதிவுகளுக்கு கீழ் பெரும்பாலும் இந்த கமெண்ட்ஸை தான் காணமுடிகிறது.
கிரிக்கெட்டை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் வார்னர்... அவ்வப்போது மைதானத்தில் அவரது ஆக்ரோஷமும் வெளிப்படும்... ஆனால் அவருக்குள் இத்தனை வேடிக்கை மனிதன் ஒளிந்திருந்தது, டிக் டாக் என்ற சமூக வலைதளத்தால் தான், உலகுக்கு தெரிய வந்துள்ளது.
டிக் டாக்கில் புட்ட பொம்மா என்ற பாடல் டிரெண்ட் ஆகி கொண்டிருந்த சமயம் அது... அந்த பாடலுக்கு வார்னர் தன் மனைவி, குழந்தைகளுடன் டிக்டாக்கில் ஆட்டம் போட, பாடல் உச்சபட்ச டிரெண்டிங் ஆனது... இதன் மூலம் இந்திய ரசிகர்கள் குறிப்பாக தென்னிந்திய ரசிகர்களை பெருமளவில் ஈர்த்த வார்னர், அதன் பின் அவர்களை மகிழ்விப்பதை அவரது மகிழ்ச்சியாக ஏற்றார்... டிக்டாக்கில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை பாராட்டி வார்னர் செய்த டூயட்களால், அவர்களது திறமைகள், மில்லியன் கணக்கானோரை சென்றடைந்தன.
இந்த நிலையில் திடீரென டிக் டாக்கிற்கு மத்திய அரசு தடை விதித்தது... என்னதான் வார்னர் உலக அளவில் பிரசித்தி பெற்ற கிரிக்கெட் வீரர் என்ற போதிலும், அவரது மனம் கவர்ந்தது தென் இந்திய ரசிகர்கள் தான்... அதற்கு ஒரு சிறிய உதாரணம் வார்னரின் இந்த பதிவு
ஆம்.. வணக்கம் டா மாப்ள மதுரைல இருந்து என்ற வசனத்தின் மூலம் டிக் டாக் வாசிகளால் கொண்டாடப்பட்ட அருண்குமாரையும்,. வார்னரையும் சேர்த்து ரசிகர் ஒருவர், வரைந்து கொடுக்க, வார்னர் அதை பதிவிட்டு வரைந்தவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இது போன்ற தென்னிந்தியாவை சேர்ந்த தீவிர ரசிகர்களை மகிழ்விக்க தற்போது Face app செயலிக்குள் குதித்துள்ளார் வார்னர்... எந்திரன், பாகுபலி, சுல்தான், ராம்போ என அதில் அவர் செய்யும் சேட்டைகளை நீங்களே பாருங்கள்...
இந்த வேடிக்கையான சேட்டைகள் மூலம் வார்னருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.. தற்போது இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளத்தில், வார்னரை பின் தொடர்வோர் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்துள்ளது. போகும் போக்கை பார்த்தால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் பட்சத்தில், வார்னருக்கு தென்னிந்திய திரையுலகில் பட வாய்ப்புகள் குவிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...
Next Story