சென்னை VS டெல்லி - சுவாரஸ்ய தருணங்கள்
நேற்றைய போட்டியில் டெல்லியை எதிர்கொண்ட சென்னை அணி போராடி தோல்வியை தழுவியுள்ளது.
முதல் இடம் சந்தேகமே இல்லாமல் டெல்லி வீரர் ஷிகர் தவானுக்கு... தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான், 58 பந்துகளை சந்தித்து, சதம் விளாசினார். இதில், 1 சிக்ஸ் மற்றும் 14 பவுண்டரிகளும் அடக்கம்.
2வது இடம் டெல்லி அணி வீரர் அக்சர் படேலுக்கு...
இறுதி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய அக்சர் படேல், 5 பந்தில் 25 ரன்கள் விளாசி போட்டியை முடித்தார். இதில் 3 சிக்சர்களும் அடக்கம்...
இதே போல சென்னை அணியிலும், ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 13 பந்துகளை சந்தித்த அவர், 4 சிக்சர்களுடன் 33 ரன்கள் எடுத்திருந்தார்.
அதே சமயம் அடித்த சிக்சர்கள் அத்தனையும் பந்துவீச்சில் கொடுத்து விட்டார் ஜடேஜா... 11 பந்துகள் மட்டுமே வீசிய ஜடேஜா, 35 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
அடுத்ததாக சென்னை வீரர் டூ பிளசி அடித்த அரைசதம்... 47 பந்துகளை சந்தித்த டூ பிளசி 2 சிக்ஸ், 6 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்தார்.
இதேபோல சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 25 பந்துகளை சந்தித்த ராயுடு, 4 சிக்ஸ் 1 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்தார்.
7 வது இடத்தில் சென்னையின் சுட்டிக் குழந்தை சாம் கரணின் டக் அவுட்....
கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய சாம் கரன் இந்த போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப்பட்டார். ஆனால் அவர் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
8 வது இடத்தில் டெல்லி ஆணியின் சுட்டிக்குழந்தை ப்ரித்வி ஷாவின் டக் அவுட்... கடந்த போட்டியில் கோல்டன் டக் ஆன பிரித்வி ஷா, இந்த போட்டியில் 2 பந்துகளை சந்தித்து பந்து வீசிய தீபக் சஹார் கையிலே கேட்ச் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
9 வது இடத்தில் சென்னை வீரர் டூ பிளசி மற்றும் டெல்லி வீரர் ராபாடா இருவரும் மோதிக்கொண்டது... ரன் ஓடும் வேகத்தில் ரபாடா மீது பயங்கரமாக மோதிய டு பிளசி சிறுது நேர ஓய்வுக்கு பின் மீண்டும் ஆடினார்.
10வது இடத்தில் ஜடேஜாவின் ஓவர் கான்பிடன்ட்.... ஷிகர் தவான் ஓடிய போது புயல் வேகத்தில் பந்தை பிடித்து ஸ்டெம்பை பதம் பார்த்த ஜடேஜா , ரன் அவுட் ஆக்கிய மகிழ்ச்சியில், பரிதாபம் கலந்த கண்களோட தவானை ஆரத்தழுவினார்... ஆனால் அது நாட் அவுட் என அறிவித்தது ஜடேஜாவிற்கு பல்பாக அமைந்தது...
Next Story