"தோனி செய்த சாதனைகள் ஒவ்வொருவரின் இதயத்திலும் நீ்ங்காமல் இருக்கும்" - கேப்டன் விராத் கோலி புகழாரம்
தோனி நாட்டிற்காக செய்த சாதனைகளை ஒவ்வொருவரின் இதயத்திலும் நீ்ங்காமல் இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
தோனி, நாட்டிற்காக செய்த சாதனைகளை ஒவ்வொருவரின் இதயத்திலும் நீ்ங்காமல் இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி புகழாரம் சூட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கிரிக்கெட் வீரர் ஒவ்வொருவரும் ஒரு நாள் தனது பயணத்தை முடித்தாக வேண்டும், என்றும், ஆனால் நீங்கள் அறிந்த ஒருவர் அந்த முடிவை மிக நெருக்கமாக அறிவிக்கும்போது, உணர்ச்சியை நீங்கள் அதிகம் உணர்கிறீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தோனி ஓய்வு - ஒரு சகாப்தத்தின் முடிவு - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து
தோனியின் ஓய்வு ஒரு சகாப்தத்தின் முடிவு என பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். நாட்டிற்கும், கிரிக்கெட் உலகிற்கும் தலைசிறந்த வீரராக தோனி இருந்ததாகவும் கூறியுள்ள கங்குலி, தோனியின் தலைமை பண்பு ஈடு செய்ய முடியாதது எனவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நல்ல விஷயமும் ஒருகட்டத்தில் முடிவுக்கு வரும் என்றும் கூறியுள்ள கங்குலி, இந்த விஷயம் சிறப்பான முடிவை எட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு
"இந்திய கிரிக்கெட்டில் தோனியின் பங்கு மகத்தானது" - ஜாம்பவான் சச்சின் டிவிட்டர் பதிவு
இந்திய கிரிக்கெட்டில் தோனியின் பங்களிப்பு மகத்தானது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இருவரும் ஒன்றாக 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையை வென்றது தனது வாழ்க்கையின் சிறந்த தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோனிக்காக விடைபெறும் போட்டி - பிசிசிஐ-க்கு ஜார்க்கண்ட் முதல்வர் வேண்டுகோள்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள தோனிக்காக, வழியனுப்பும் விடைபெறும் போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்த வேண்டும் என, ஜார்க்கண்ட் மாநிலம் முதலமைச்சர் கேமந்த் சோரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அந்தப் போட்டியை ஜார்க்கண்ட் அரசு நடத்த விரும்புகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story