இந்தியா Vs ஆஸ்திரேலியா இன்று முதல் ஒரு நாள் போட்டி
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி, இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதால் இந்திய வீரர்கள், குறைவான நேரம் மட்டுமே பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் போது ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால், போட்டியில் அவர் களமிறங்குவாரா என கேள்வி எழுந்துள்ளது. சம பலம் கொண்ட இரு அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
Next Story