"ஐபிஎல் ஏலத்தில் ஜாக்பாட் : பானிப்பூரி விற்றவர் தற்போது கோடீஸ்வரர்"
வெளிநாட்டு வீரர்கள் மட்டுமின்றி, சில இந்திய ஜூனியர் வீரர்களுக்கும் ஐபிஎல் ஏலத்தில் , ஜாக்பாட் அடித்துள்ளது, அவர்கள் குறித்த விவரம் உங்கள் பார்வைக்கு
தென்னாப்பிரிக்காவில் தொடங்கவுள்ள ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் , இடம் பெற்றுள்ள சில இளம் வீரர்களை ஐ.பி.எல் அணிகள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது..
* ஜூனியர் அணியின் கேப்டன் பிரியம் கார்க்கை ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 1 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
* ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யஷாஸ்வி ஜெய்ஸ்வாலை 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கும், கார்த்திக் தியாகியை 1 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கும், ஆகாஷ் சிங்கை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது..
* இறுதியாக சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது...
* இதில் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த யஷாஸ்வி ஜெய்ஸ்வால் , மும்பையில் பானிப்பூரி விற்றபடியே கிரிக்கெட் போட்டிகளில் ஆடி தனது முழு திறமையை வெளிப்படுத்தியால் ஐபிஎல் அதிர்ஷ்டம் மூலம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
Next Story