"ஐபிஎல் களத்தில் ஜொலிக்க சில தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு"
ஐபிஎல் களத்தில் ஜொலிக்க சில தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை வாங்க கொல்கத்தா , பெங்களூர் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
அவரது அடிப்படை ஏல தொகை 30 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கொல்கத்தா அணி வருணை 4 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இதேபோல் பந்துவீச்சாளர் சித்தார்த்தையும் கொல்கத்தா அணி அவரது அடிப்படை ஏல தொகையான 20 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. டி.என்.பி.எல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் கலக்கிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
Next Story