பிசிசிஐ தடைக்கு எதிரான தமிழக கிரிக்கெட் சங்கம் மனு : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்தலில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பிசிசிஐ தடைக்கு எதிரான தமிழக கிரிக்கெட் சங்கம் மனு : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
x
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்தலில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, அவசர வழக்காக விசாரிக்க  உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பி.சி.சி.ஐ அமைப்பின் புதிய விதிகளை  ஏற்காதது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், பி.சி.சி.ஐ  தேர்தல் மற்றும் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க  தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வரும் 23 ஆம் தேதி பிசிசிஐ தேர்தல் நடைபெறுவதையொட்டி,  மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால் தமிழக கிரிக்கெட் சங்கத்தின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்