கிரிக்கெட்டின் புகழை கெடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பா.சிவந்தி ஆதித்தன்

கிரிக்கெட்டின் புகழை கெடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் வலியுறுத்தி உள்ளார்.
x
நான்காவது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அண்மையில் நடந்து முடிந்தது.  8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இரண்டாவது முறையாக மகுடம் சூடியது.

இந்த தொடரின் போது சூதாட்ட முயற்சியில் ஈடுபட்டதாக சில வீரர்கள் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்  3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன், இந்த குற்றச்சாட்டு வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் மீதான நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில், இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது ஆயுட்கால தடை போன்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.சிவந்தி ஆதித்தன் வலியுறுத்தி உள்ளார்.

சூதாட்டப் புகார்கள் அணி உரிமையாளர்கள், ரசிகர்கள் மட்டுமன்றி, அணியின் வெற்றிக்காக 100 சதவீதம் பாடுபடும் நேர்மையான வீரர்களையும் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் அணியை பொறுத்தவரை இந்த விவகாரத்தில் தொடக்கத்திலேயே போதுமான விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டோம் என்றும், இது நேர்மையான வீரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வீரர்களின் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்த பா.சிவந்தி ஆதித்தன், போட்டியில் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் இன்னும் அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த போட்டியில் வெளி மாநில வீரர்களையும் விளையாட அனுமதித்தால், டி.என்.பி.எல். போட்டிகள் நன்றாக அமையும் என்றும் பா.சிவந்தி ஆதித்தன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்