காரைக்குடி அணிக்கு எதிரான லீக் போட்டி : திண்டுக்கல் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில், காரைக்குடி காளை அணிக்கு எதிரான போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில், காரைக்குடி காளை அணிக்கு எதிரான போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது. நெல்லையில் நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் ஆடிய காரைக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்ரீகாந்த் அனிருதா 98 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய திண்டுக்கல் அணி 17 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 161 ரன்கள் எடுத்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணியில் தொடக்க வீரர்கள் ஹரி நிஷாந்த் 81 ரன்களும், ஜெகதீசன் 78 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம், திண்டுக்கல் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
Next Story