ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய அணி

உலக கோப்பை தொடரில் வங்கதேச அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய அணி
x
போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா 104 ரன்களும், ராகுல் 77 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் ஆட்டம் இழந்தனர். இறுதியாக 48 ஓவர்களில் வங்கதேச அணி 286 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்கும் முன்னேறியது. 104 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்