ரன் மெஷின் என மீண்டும் நிரூபித்த கோலி : 20000 ரன்களை அதிவேகமாக கடந்து சாதனை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி வரலாறு படைத்தார்.
x
இந்த போட்டியில் கோலி 37 ரன்கள் எடுத்தபோது, மிகக்குறைந்த போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையையும், புதிய வரலாற்றையும் கோலி படைத்தார். கோலி சேர்த்துள்ள  20,000 ரன்களில், 12 ஆயிரத்து 121 ரன்கள் ஒருநாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியில் 6 ஆயிரத்து 613 ரன்களும், டி20 போட்டியில் 2,263 ரன்களும் சேர்த்துள்ளார். முன்னதாக சச்சின், லாரா ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர். அதாவது, சச்சின், லாரா இருவரும் தங்களின் சர்வதேசப் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை 453 இன்னிங்ஸ்களில் அடைந்தனர். தற்போது கோலி 417 இன்னிங்ஸில் அதை கடந்து சச்சின் லாரா சாதனை முறியடித்துள்ளார். மேலும் இந்த உலக கோப்பை தொடரில் தொடர்ந்து 4வது முறையாக அரை சதம் அடித்துள்ளார். விராட் கோலி, இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் இந்திய கேப்டன் ஒருவர் தொடர்ந்து நான்கு முறை அரை சதம் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்