ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. போட்டி நடைபெற்ற பிர்மிங்காமில் மழை பெய்ததால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரஷி வான்டெர் 67 ரன்கள் அடித்தார். 242 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் சொர்ப ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி சதமடித்தார். இறுதி ஓவரில் வெற்றி இலக்கை அடைந்ததன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
Next Story