உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : முதலில் பேட் செய்த இந்தியா 352 ரன்கள் குவிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியேவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 352 ரன்கள் குவித்தது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியேவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 352 ரன்கள் குவித்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் தவான் சதம் விளாசினார். 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 36 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
Next Story