நடுவரின் கவனக்குறைவால் ஆட்டமிழந்த கெயில் : தொடரும் நோ-பால் சர்ச்சை

உலக கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகள் - ஆஸ்திரேலியா மோதிய ஆட்டத்தில் அதிரடி வீரர் கெயிலுக்கு நடுவர் அவுட் கொடுத்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
நடுவரின் கவனக்குறைவால் ஆட்டமிழந்த கெயில் : தொடரும் நோ-பால் சர்ச்சை
x
உலக கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகள் - ஆஸ்திரேலியா மோதிய ஆட்டத்தில் அதிரடி வீரர் கெயிலுக்கு நடுவர் அவுட் கொடுத்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.  வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில், 289 ரன் இலக்கை நோக்கி மேற்கு இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் கெயில்,லீவிஸ் விளையாடினர். ஸ்டார்க் வீசிய 5 வது ஓவரில் கெயில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். ஆனால் அதற்கு முந்தைய பந்தை ஸ்டார்க் நோ பாலாக வீசியது ரீப்ளேயில் தெளிவாக தெரிந்தது. நோபாலாக வீசப்பட்ட பந்திற்கு  நடுவர் பிரி ஹிட் வழங்காததால் கெயில் ஆட்டமிழக்க நேரிட்டது, மேலும் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முக்கியத்துவம் வாய்ந்த உலக கோப்பை போட்டியில் கவனமின்றி செயல்பட்ட நடுவரை நீக்கம் செய்ய வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்