பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி
x
ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில்  சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில், தொடக்க ஆட்டக்கார‌ர் டூபிளசிஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 96 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து வந்த ரெய்னாவும் அரைசதம் கடந்தார். மற்ற வீர‌ர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில், சென்னை அணி, 170 ரன்கள் எடுத்த‌து. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில், கே.எல்.ராகுல் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். 36 பந்துகளில், 71 ரன்கள் குவித்த அவர், அணியின் வெற்றிக்கு வித்திட்டார். தொடர்ந்து வந்த வீர‌ர்களும் தங்கள் பங்கிற்கு சிறப்பாக விளையாட, பஞ்சாப் அணி, 18 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்