கைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளிகள்

மலேசியா - இந்தியா நட்புறவு அமர்வு சார்பில் கோலாலம்பூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
கைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளிகள்
x
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. தங்கப் பதக்கத்தை வென்ற இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் இடம் பெற்றிருந்னர். நாடு திரும்பிய இவர்களில் ஈரோட்டைச் சேர்ந்த பச்சைமுத்து மற்றும் மோகன் ஆகிய இருவரும்  ஆட்சியர் கதிரவனை சந்தித்து ஆசி பெற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் அரசு போதிய நிதி மற்றும் வசதிகள் செய்து கொடுத்தால் பாரா ஓலிம்பிக்கிலும் தங்கம் வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்