ஐதராபாத் Vs கொல்கத்தா : 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
ஐதராபாத் Vs கொல்கத்தா : 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா
x
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் ஆடிய ஐதராபாத் அணியின், வார்னர் 85, பிரிஸ்டோ 39 ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதனை தொடர்ந்து வந்த தமிழக வீர‌ர் விஜய் சங்கர் 24 பந்துகளில் 40 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். இதனால் கொல்கத்தா அணிக்கு 182 இலக்காக நிர்ண‌யிக்கப்பட்டது. இதை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியில், நிதிஷ் ரானா 68 ரன்கள், உத்தப்பா 35 ரன்கள் என பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் வந்த அன்ட்ரூவ் ரசுல் 19 பந்துகளுக்கு 49 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்