நியூசிலாந்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 87 ரன்களும், ஷிகர் தவான் 66 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே தடுமாறியது. அந்த அணி 40 புள்ளி 2 ஓவர்களில் 234 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரில், 2 க்கு 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
Next Story