நியூசி.க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் - இந்திய மகளிர் அணி அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசி.க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் - இந்திய மகளிர் அணி அபார வெற்றி
x
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 192 ரன்களுக்கு சுருண்டது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா 105 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஜெமிமா ரோட்ரிஜஸ்  81 ரன்கள் எடுக்க இந்திய அணி 33வது ஓவரிலே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய மகளிர் அணி 1க்கு0 என முன்னிலை பெற்றுள்ளது. சதம் விளாசிய மந்தனா ஆட்டநாயகி விருதை வென்றார். 

Next Story

மேலும் செய்திகள்