ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு நடால் தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு நட்சத்திர வீரர் நடால் தகுதி பெற்றுள்ளார்.
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு நடால் தகுதி
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு நட்சத்திர வீரர் நடால் தகுதி பெற்றுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேத்தீவை எதிர்கொண்ட நடால், 6க்கு3,6க்கு2,6க்கு2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

நடப்பு சாம்பியன் வோஸ்னியாக்கி முன்னேற்றம்



ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் தொடரில், நடப்பு சாம்பியன் வோஸ்னியாக்கி, 3 - வது சுற்றுக்கு முன்னேறினார். மெல்போர்ன் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில், ஸ்வீடன் வீராங்கனை JOHANNA LARSON - ஐ எதிர்கொண்ட அவர் 6 க்கு 1 , 6 க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

3வது சுற்றுக்கு ஷரபோவா முன்னேற்றம்



ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றுக்கு ரஷ்யாவின் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா தகுதி பெற்றுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் சுவீடன் வீராங்கனை ரெபக்கா பீட்டர்சனை 6க்கு2,6க்கு1 என்ற செட் கணக்கில் ஷரபோவா வீழ்த்தினார்.

3வது சுற்றுக்கு ரோஜர் ஃபெடரர் தகுதி



ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் பிரிட்டன் DAN EVANS ஐ எதிர்கொண்ட பெடரர், 7க்கு6,7க்கு6,6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

தென்னாப்பிரிக்க வீரர் ஆண்டர்சன் தோல்வி



இதனிடையே 5ஆம் நிலை வீரரான தென்னாப்பிரிக்காவின் கேவின் ஆண்டர்சன் தோல்வியை தழுவினார். 2வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் பிரான்சிஸை எதிர்கொண்ட ஆண்டர்சன் 4-6, 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினார்.

இரட்டையர் பிரிவு : முதல் சுற்றில் இந்திய ஜோடிகள் தோல்வி



ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போப்பண்ணா , ஷரண் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவியது. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் ஸ்பெயினின் கார்சியா ஜோடியை எதிர்கொண்ட போப்பண்ணா, ஷரன் ஜோடி 1க்கு6, 6க்கு4,5க்கு7 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவியது. இதே போன்று பயேஸ் ஜோடி மற்றும் நெடுஞ்சேழியன் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவியது. 


Next Story

மேலும் செய்திகள்