உலகக் கோப்பை ஹாக்கி தொடர்: சாதனை படைக்குமா இந்தியா
14வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் 28ஆம் தேதி புவனேஷ்வர் நகரில் தொடங்குகிறது.
14வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் 28ஆம் தேதி புவனேஷ்வர் நகரில் தொடங்குகிறது. உலகக் கோப்பை தொடரை இந்தியா மூன்றாவது முறையாக நடத்துகிறது. 1975ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. இதுவரை இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.அதிகபட்சமாக பாகிஸ்தான் 4 முறையும், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் 3 முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன. 43 ஆண்டுகளாக உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் அரையிறுதி சுற்றுக்கு கூட இந்திய அணி தகுதிப் பெறவில்லை.
மன்பிரீத் சிங் தலைமையில் களமிறங்க உள்ள இந்திய அணியில், பி.ஆர். ஸ்ரீஜேஸ்க்கு மட்டும் தான் 30 வயதுக்கு மேல், மற்ற அனைவரும் இளம் வீரர்களே.2016ஆம் ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலிருந்து 7 வீரர்கள், இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். 2016ஆம் ஆண்டு ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் தான், இந்த அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட உள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா இதுவரை 91 போட்டியில் களமிறங்கியுள்ளது. இதில் இந்தியா போட்டியில் 38 வெற்றியும், 40 போட்டிகளில் தோல்வியும், 13 போட்டி சமனில் முடிந்தது.
Next Story