விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது...
விளையாட்டு துறையின் உயரிய விருதான ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி , பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
* விளையாட்டு துறையின் உயரிய விருதான ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி , பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
* ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும், வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு விருதுகளை வழங்கி கவுரவிக்கும்.
* இந்நிலையில், சச்சின், தோனிக்கு பிறகு கேல் ரத்னா விருதை பெறும் மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற மீரா பாய் சானும் கேல் ரத்னா விருதை வென்றுள்ளார்.
* இதே போன்று தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் னசேகரன், அர்ஜூனா விருதை வென்றுள்ளார். டேபிள் டெனனிஸ் வீராங்கனை மணிக்கா பத்ரா, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தானா, ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங், டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, ஈட்டி எறிதல் நீரஜ் சோப்ரா, தடகள வீராங்கனை ஹிமா தாஸ், பேட்மிண்டன் வீராங்கனை சிக்கி ரெட்டி ஆகியோரும் அர்ஜூனா விருதை வென்றுள்ளனர்.
* சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது, குத்துச்சண்டை பயிற்சியாளர் சுபேந்தர் குட்டப்பா , பளுதூக்குதல் பயிற்சியாளர் விஜய் சர்மா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Next Story