ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
ஹாங்காங்கிற்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தவான் 127 ரன்களும் அம்பதி ராயுடு 60 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய ஹாங்காங் அணி 50 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
Next Story