ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பற்றி ஒரு செய்தி தொகுப்பு...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கும் நிலையில் அந்த தொடர் பற்றி சில தகவல்கள்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்கு பிறகு துபாயில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பங்கேற்கின்றன.
6 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் பாகிஸ்தான், ஹாங்காங்குடன் நடப்பு சாம்பியனான இந்தியா இடம்பெற்றுள்ளது. பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் இடம்பெற்றுள்ளது.
இந்த பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள், SUPER 4 என்ற அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ரவுண்ட் ராபின் முறைப்படி நடைபெறும் இந்தச் சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி, இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இறுதிப் போட்டி வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வரும் 18ஆம் தேதி ஹாங்காங்குடன் மோதுகிறது. ஓய்வு ஏதுமின்றி அடுத்த நாளே பெரிதும் எதிர்பார்க்கப்படும், இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.
இதுவரை ஆசிய கோப்பை தொடர் 13 முறை நடந்துள்ளது. அதில் இந்தியா 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆசிய போட்டியில் அதிக ரன் விளாசியவர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இலங்கை வீரர் ஜெயசூரியா, அதிக விக்கெட் டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையை முரளிதரன் பெற்றுள்ளார்.
ஆசிய போட்டியில் இந்தியா இதுவரை 48 போட்டிகளில் விளையாடி 31 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 16 போட்டிகளில் தோல்வியை கண்டுள்ளது.
Next Story