அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அரை இறுதிக்கு மேடிசன் கீ தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீ அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அரை இறுதிக்கு மேடிசன் கீ தகுதி
x
அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீ, அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு போட்டியில் ஜப்பான் வீராங்கனை NAOMI OSAKA  அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனை MADISON KEY -  வும் , ஸ்பெயின் வீராங்கனை CARLA SUAREZவும் மோதினர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் MADISON KEY  6க்கு 4, 6 க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரை இறுதிக்கு முன்னேறினார்.

ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா முன்னேற்றம்

மற்றொரு காலிறுதிப் போட்டியில், ஜப்பான் வீராங்கனை NAOMI OSAKA - ஐ உக்ரைன் வீராங்கனை LESIA TSURENKO எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில், NAOMI OSAKA 6க்கு1, 6 க்கு1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 22 ஆண்டுகளில் ஜப்பான் வீராங்கனை ஓருவர், அமெரிக்க ஒபன் டென்னிஸ் அரை இறுதிக்கு தகுதி பெற்றிருப்பது, இதுவே முதல் முறை. 

அரையிறுதிக்கு தகுதிபெற்றார் ஜோகோவிச்

ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் செர்பிய வீரர் DJOKOVICம், ஆஸ்திரேலியாவின் JOHN MILLMAN ரும் மோதினர். 2 மணி நேரம் 48 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் DJOKOVIC வெற்றி பெற்று, அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில், குரோஷிய வீரர் மரின் சிலிக், ஜப்பான் வீரர் NISHIKORI , - ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 4 மணி நேரம் போராடி, NISHIKORI வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்