ஆசிய போட்டி - இந்தியாவுக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
ஆசிய விளையாட்டு, பாய்மர படகு போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஆசிய விளையாட்டு, பாய்மர படகு போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளன.பெண்கள் பிரிவில் கோவையை சேர்ந்த வர்ஷா கௌதம், மும்பையை சேர்ந்த ஸ்வேதா ஷெர்வெகர் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், ஹர்ஷிதா தோமர் வெண்கலம் பதக்கமும் வென்றனர். ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த வருண் தக்கார் மற்றும் கே.சி.கணபதி ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
63 பதக்கங்களுடன் 8-வது இடத்தில் இந்தியா
இதேபோல், ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் ஆண்கள் பிரிவில், இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. இதுவரை,
13 தங்கம், 22 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் 63 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை பிரிவில் 75 கிலோ எடைபிரிவின், அரையிறுதிப்போட்டியில் இருந்து, கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக விகாஸ் கிருஷ்ணன், விலகினார். அரையிறுதிக்கு தகுதி பெற்றதால், வெண்கல பதக்கத்தை அவர் தக்க வைத்துள்ளார்.
Next Story