ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியாவுக்கு 8வது இடம்
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா ஒரே நாளில் 2 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் ஜான்சன் ஜின்ஜன், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதேபோல், மகளிர் பிரிவில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற இந்திய அணி தங்கம் வென்றது. ஒரே நாளில் 2 தங்கம் வென்று இந்தியா சாதித்துள்ளது. இதேபோல், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில், இந்திய ஆண்கள் அணி, 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்தப் போட்டியில் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் பெண்கள் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் உன்னிகிருஷ்ணன் சித்ரா, மூன்றாம் இடம் பிடித்து, வெண்கலம் வென்றார்.
வட்டு எறிதலில், இந்தியாவின் சீமா புனியா மூன்றாம் இடம்பிடித்து வெண்கலம் வென்றார். ஒரே நாளில் இந்தியா 5 பதக்கங்களை கைப்பற்றியதால், பதக்க பட்டியலில் 13 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களுடன் 8வது இடத்தில் உள்ளது.
Next Story