ஹெப்டத்லான் போட்டி : தங்கம் வென்றார், ஸ்வப்னா
ஆசிய விளையாட்டு ஹெப்டத்லான் போட்டியில், இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்று, அசத்தினார்.
ஆசிய விளையாட்டு ஹெப்டத்லான் போட்டியில், இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்று, அசத்தினார்.
நீளம் தாண்டுதல் : தங்கம் வென்றார், அரபிந்தர் சிங்
நீளம் தாண்டும் பிரிவில், இந்திய வீரர் அரபிந்தர்சிங் தங்கம் வென்று, அசத்தியுள்ளார். இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்த போட்டியில், இவர், 16 புள்ளி ஏழு எழு மீட்டர் தாண்டி, இந்த சாதனையை எட்டினார்.
கலப்பு இரட்டையர் டென்னிஸ் - வெண்கலம் வென்றது, இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டியில், டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.அரையிறுதியில் சீனாவின் வாங் சுகின்- சன் யிங்ஷா ஜோடியை, எதிர்கொண்ட இந்தியாவின் சரத் கமல்- மணிகா பத்ரா ஜோடி போராடி தோல்வி அடைந்தது.
மகளிர் 200 மீ ஓட்டம்- இந்தியாவிற்கு வெள்ளி
ஆசிய விளையாட்டு போட்டியில், மகளிர் 200 மீட்டர் ஓட்டத்தில்,இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. இறுதிப்போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த இந்திய வீராங்கனை டுட்டி சந்த், வெள்ளி பதக்கம் வென்றார்.
Next Story