ஆசிய விளையாட்டு போட்டி : 8-வது இடத்தில் இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டியில் 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங்களுடன் பட்டியலில், இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங்களுடன் பட்டியலில், இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.
வில்வித்தை குழு பிரிவு - இந்தியாவுக்கு 2 வெள்ளி
வில்வித்தை குழு பிரிவில் இந்திய ஆடவர் அணியும், மகளிர் அணியும் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றன. இரு பிரிவின் இறுதிச் சுற்றிலும் இந்திய அணிகள், தென் கொரிய அணிகளிடம் வீழ்ந்தன.
டேபிள் டென்னிஸ் - தமிழக வீரர்கள் அடங்கிய குழுவுக்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டு போட்டியில், டேபிள் டென்னிஸ் வரலாற்றில் முதன் முறையாக இந்திய அணி பதக்கத்தை தட்டிச் சென்றது. ஆடவர் குழு பிரிவில் தமிழக வீரர்கள் சத்யன் மற்றும் சரத் கமல் அடங்கிய குழு, வெண்கலப் பதக்கத்தை வென்றது.
ஆண்கள் ஹாக்கி - அரை இறுதிக்கு இந்திய அணி தகுதி
ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. லீக் போட்டியில் இலங்கை அணியை 20 க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
மகளிர் 200 மீ ஓட்டம் : ஹிமா தாஸ் வெளியேற்றம்
பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் அரை இறுதி சுற்றிலிருந்து ஹிமா தாஸ் வெளியேற்றப்பட்டுள்ளார். போட்டி தொடங்கும் முன்பே ஓடியதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதே போல் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டுட்டி சந்த் அரை இறுதி சுற்றில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
மல்யுத்தப் போட்டி - இந்தியாவிற்கு 2 பதக்கம்
ஆசிய விளையாட்டு மகளிருக்கான மல்யுத்தப் போட்டியின் 52 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் பின்கி பல்ஹாரா வெள்ளிப் பதக்கமும், மாலாபிரபா எல்லப்பா வெண்கல பதக்கமும் வென்றனர்.
400 மீ தொடர் ஓட்டம் - இந்தியாவிற்கு வெள்ளி
ஆசிய விளையாட்டு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. தொடர் ஓட்டத்தில் இந்திய வீரர்கள் முகமது அனாஸ், ஹிமா தாஸ், ராஜீவ் ஆரோக்யா, பூவம்மா ராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story