20 வயதில் பல தங்கப் பதக்கங்களை குவித்த நீரஜ்
ஆசிய போட்டி ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா குறித்து தற்போது காணலாம்..
நீரஜ் சோப்ரா, தடகளத்தை ஆளுப்போகும் இந்திய வீரர். 20 வயதான நீரஜ்க்கு இந்திய அணிக்கு தலைமையேற்று அணிவகுக்கும் பெருமை கிடைத்தது.பொதுவாக இந்தியா ஈட்டி எறிதல் உள்ளிட்ட விளையாட்டில் கவனம் செலுத்துவது இல்லை. ஆனால், இதை மாற்றும் நோக்கில் சர்வதேச அரங்கில் கால் பதித்தார் நீரஜ் சோப்ரா..2016ஆம் ஆண்டு தெற்காசிய போட்டியில் தங்கம், அதே ஆண்டு இளையோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் என்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா.நடப்பாண்டின் காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டியிலும் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.ஆசிய போட்டியில் 86 புள்ளி 48 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி தேசிய அளவில் சாதனை படைத்தார் நீரஜ், இந்த செயல்பாட்டை அவர் ஒலிம்பிக் போட்டியில் நிகழ்த்திருந்தால் வெள்ளி பதக்கம் கிடைத்திருக்கும். 20 வயதில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள நீரஜ் சோப்ரா, நிச்சயம் ஒலிம்பிக் போட்டி ஈட்டி எறிதலில் பிரிவில் தங்கம் வெல்லும் காலம் வெகு தூரம் இல்லை..
Next Story