மூன்றாவது முறையாக தங்க பதக்கத்தை வெல்லும் முனைப்பில் இருக்கும் ஏழை மாணவியின் சாதனை பயணம்
ஆசிய விளையாட்டு போட்டியில், தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்க பதக்கத்தை வெல்லும் முனைப்பில் இருக்கும் இந்திய கபடி அணியில் இடம்பெற்றுள்ள ஏழை மாணவியின் சாதனை பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்று இந்திய கபடி அணியில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ள கவிதாவின் வாழ்க்கை பயணம் அவ்வளவு சுலபமானதல்ல...பனிமலைகள் நிறைந்த இமாச்சல் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தனது குழந்தை பருவத்தில் கடும் குளிரில் இருந்து காத்துகொள்ள போர்வை கூட இன்றி தவித்துள்ளார், வயிற்றுக்கு தேவையான உணவுகூட இன்றி குடும்பத்துடன் பட்டினியாக கடந்த நாட்களோ பல..மணாலி அருகே சாலையோர டீ கடை நடத்தி வரும் இவரது பெற்றோர் பிரித்வி சிங் மற்றும் கிருஷ்ணா தேவிக்கு இரண்டாவது மகளாக பிறந்தவர், கவிதா.சிறு வயது முதலே தனது பெற்றோருக்கு உதவியாக டீ விற்பது, கடையின் தரையை சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.இப்படி பல இன்னலுகளுக்கு நடுவே, விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர், கபடி விளையாட அதிகமாக செலவு செய்ய தேவையில்லை என்ற காரணத்தினாலையே அவ்விளையாட்டை தேர்வு செய்தார். தமது அயராம முயற்சியின் விளைவாக, தேசிய அளவிலான போட்டியில் இடம்பிடித்த கவிதாவிற்கு நிதி உதவி அளித்தது மத்திய அரசு.தனது வாழ்வில் அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்ற நிலை அப்போது தான் படி படியாக மாறியதாக குறிப்பிடுகிறார்,கவிதா. 2011 ஆம் ஆண்டு கவிதாவின் வெற்றி பயணத்திற்கு தடையாக உருவெடுத்தது செரிமன கோளாறு, அதில் இருந்து மீண்டு வந்த அவருக்கு காத்திருந்தன தங்க பதக்கங்கள்..2012 ,2014 என அடுத்தடுத்த நடைபெற்ற ஆசிய கபடி போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்ல இவரின் பங்களிப்பு முக்கிய இடத்தை பிடித்தது. இந்த வெற்றிகளின் மூலம் வறுமையில் இருந்து விடுதலை பெற்றது கவிதாவின் குடும்பம்...இன்று தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யும் நிலையை அடைந்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் பங்கேற்றுள்ள கவிதா, தேசத்திற்கு மீண்டும் ஒரு தங்கத்தை பெற்றுத் தருவார் என எதிர்பார்க்கலாம்.சூழ்நிலை கைதியாக மாறிவிட்டோம் என்று காலத்தை குற்றச்சாட்டி வரும் பலருக்கு நடுவே தடைகள் அனைத்தையும் உடைந்தெறிந்த இந்த 24 வயது மங்கை,இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக திகழ்கிறார்.ஏழை குடும்பத்தில் இருந்து வெளிவந்துள்ள இந்த விளையாட்டு ரத்தினத்தை போல் நம் கிராமங்களில்
திறமை வாய்ந்த குழந்தைகளோ ஏராளம்.
Next Story