ஆசிய மல்யுத்த போட்டி : இந்திய வீராங்கனை திவ்யா வெண்கலம்

ஆசிய போட்டி மகளிருக்கான மல்யுத்தம் 68 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கர்கன் வெண்கலம் வென்றார்.
ஆசிய மல்யுத்த போட்டி : இந்திய வீராங்கனை திவ்யா வெண்கலம்
x
ஆசிய போட்டி மகளிருக்கான மல்யுத்தம் 68 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கர்கன் வெண்கலம் வென்றார். சீன தைபே வீராங்கனை சென் ஐ எதிர்கொண்ட திவ்யா 10க்கு0 என்ற புள்ளி கணக்கில் எளிதில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். 

மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு ஏமாற்றம்



ஆசிய போட்டி மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு சோகமான நாளாக அமைந்தது. GREECO ROMAN பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர் மனிஷ் காலிறுதி ஆட்டத்தின் போது காயம் காரணமாக விலகினார். இதே போன்று மற்றொரு இந்திய வீரரான கிரேனன்டர் காலிறுதியில் தோல்வியை தழுவினார். இதனால், மல்யுத்தத்தில் நேற்று ஏமாற்றம் ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்