3-வது டெஸ்ட் : இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு...
3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 521 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்தது.இங்கிலாந்து
அணி முதல் இன்னிங்சில் 161 ரன்களில் சுருண்டது.இதன் மூலம் முதல் இன்னிங்சில் இந்தியா 168 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில்.விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.புஜாரா 72 ரன்களிலும் விராட் கோலி 103 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 23-வது சதம் இதுவாகும்.
இதனையடுத்து 2-வது இன்னிங்சில் இந்திய அணி 110 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது .
இதன்படி இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 520 ரன்கள் முன்னிலை பெற்றது. 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருந்தது.
Next Story