புலம் பெயர்ந்தவர்கள், அகதிகளால் உருவான பிரான்ஸ் அணி
உலகம் முழுவதும் அகதிகளுக்கு தஞ்சமடைய இடமில்லை என எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், புலம் பெயர்ந்தவர்களால் உருவான பிரான்ஸ் அணி தான், கால்பந்து போட்டியில் உலக கோப்பையை வென்றுள்ளது.
உடமைகளை இழந்து, உரிமைகளை இழந்து வயிற்று பிழைப்பிற்காக வேறு நாடு செல்லும் மக்களுக்கு, கிடைப்பதோ சிறைச்சாலை தான். அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவுக்குள் வரும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து கொடூரமாக நடந்து கொண்டு வருகிறது.
ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்னர் புலம் பெயர்ந்தவர்கள், அகதிகளுக்கு தங்கள் நாட்டு கதவை திறந்த பிரான்ஸ், அதன் பலனை தற்போது சுவைத்து வருகிறது.
20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை பிரான்ஸ் வெல்ல உதவியதற்கு முக்கிய காரணம் புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களது வாரிசு தான். தற்போதைய பிரான்ஸ் அணியின் இடம்பெற்றுள்ளவர்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்தவர்களே.
சிறந்த இளம் வீரர் விருதை வென்ற எம்பாப்பேவின் பெற்றோர் அல்ஜெரியா நாட்டிலிருந்து வந்தவர்கள். பிரான்ஸ் அணியின் நம்பிக்கை நட்சித்தராமாக விளங்கும் போக்பாவுக்கும் பிரான்ஸ் சொந்த நாடு அல்ல.
காண்டே மாலியை சேர்ந்தவர், பிரான்ஸ் அணியின் சாமுவேல் உம்மித்தியின் பூர்விகம் கேமாரூன் ஆகும்.ஸ்டீவ் மண்டன்டா காங்கோவை சேர்ந்தவர். இப்படி புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் செல்லும் நாடுகளுக்கு பெருமை சேர்த்து தந்தாலும், உலகின் பல நாடுகள், அவர்களை ஏற்க மறுத்தே வருகின்றன பிரான்ஸின் இந்த கதை. அகதிகள் மற்றும் புலன் பெயர்ந்தவர்களின் வாழ்வுக்கு நம்பிக்கையை தந்துள்ளது.
Next Story