இங்கிலாந்து, குரோஷியா அணிகள் மோதல்
நடப்பு தொடரில் குரோசிய அணி தோல்வியே அடையாமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.டென்மார்க், ரஸ்ய அணிக்கு எதிரான நாக் அவுட் ஆட்டத்தில் பெனால்டி சூட் அவுட் முறையில் வென்றது குறிப்பிடத்தக்கது. குரேசிய அணியில் பலமாக மொட்ரிச் கருதப்படுகிறார். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கடைசியாக 1990ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தான் அரையிறுதியில் விளையாடியது. இங்கிலாந்து அணியில் உள்ள 17 வீரர்கள் அந்த நிகழ்வுக்கு பிறகு பிறந்தவர்களே. கேப்டன் ஹாரி கேன் அதிகபட்சமாக 6 கோல்கள் அடித்து சிறப்பான பார்மில் உள்ளார். குரோசியாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் உத்வேகத்துடன் இங்கிலாந்து உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 4 முறையும், குரோஷிய 2 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது.