உலக கோப்பை கால்பந்து தொடர்: காலிறுதி போட்டிக்கு முன்னேறியது பிரேசில்
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி தகுதி பெற்றுள்ளது.
உலக கோப்பை கால்பந்து தொடர்: காலிறுதி போட்டிக்கு முன்னேறியது பிரேசில்
மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில், பிரேசில் வீரர்கள் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினர். பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் கோல் அடித்தார். இது நெய்மர் உலகக் கோப்பை வரலாற்றில் அடிக்கும் 6வது கோலாகும். இதே போன்று போட்டியின் 88வது நிமிடத்தில் ராபர்டோ கோல் அடிக்க, பிரேசில் அணி 2 கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது.ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 2 க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த அணி என்ற புதிய சாதனையை பிரேசில் படைத்தது. மெக்சிகோ அணி தொடர்ந்து 7வது முறையாக 2வது சுற்றில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை கால்பந்து தொடர் : ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பெல்ஜியம்
ஜப்பானுக்கு எதிரான போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில், இரண்டாவது பாதியின் தொடக்கத்திலேயே இரண்டு கோல்களை அடித்து ஜப்பான் அணி 2 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.தொடர்ந்து ஆடிய பெல்ஜியம் அணி 3 கோல்களை அடித்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில், பெல்ஜியம் அணி 3 க்கு 2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் பெல்ஜியம் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
Next Story