"குடும்ப அரசியலை தோற்கடிக்க வேண்டும்"...இளைஞர்களுக்கு பிரதமர் திடீர் கோரிக்கை

x

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக சுமார் ஒரு கோடி, முதல் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில்

பிரதமர் உரையாற்றினார். 2047க்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற இலக்கை அடைய இந்தியா பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்தியாவின் திசை எது என்பதை உங்களது வாக்குகள் தீர்மானிக்கும் என்று குறிப்பிட்டார். 75 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டிற்கு விடுதலை அளிக்கும் மிகப்பெரும் பொறுப்பு இளைஞர்களுக்கு இருந்ததுபோல. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான மிகப்பெரும் பொறுப்பு இளைஞர்களுக்கு இருப்பதாக தெரிவித்தார். இளைஞர்களின் சக்தியை தாங்கள் எப்போதும் அதிகம் நம்புவதாக குறிப்பிட்ட பிரதமர், இளைஞர்கள் தங்கள் ஒற்றை வாக்கின் மூலம் குடும்ப அரசியலை தோற்கடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்