எதிர்பாரா மாற்றத்திற்கு தயாராகும் உபி.. கடின முடிவு எடுக்கும் பாஜக தலைமை
உத்தரபிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத பாஜக அமைப்பு ரீதியாக மறுசீரமைப்புக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநில பாஜக தலைவர் பூபேந்திர சவுத்ரி, நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது, கட்சியின் மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக முன்வந்தாக கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரதமர் இல்லத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
முன்னதாக, உத்தர பிரதேசத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவைச் சந்தித்தது பேசும் பொருளாகியது. இந்நிலையில், தேர்தல் பின்னடைவில் இருந்து மீண்டு வருவது தொடர்பாக ஆலோசித்து வரும் பாஜக, உத்தர பிரதேச மாநில தலைவர் ஆக ஓபிசி பிரிவு சேர்ந்த ஒருவரை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.