நீட் ரத்துக்காக அமைச்சர் உதயநிதி போட்ட X பதிவு

x

'நீட் விலக்கு - நம் இலக்கு' எனும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அதற்கு தமிழ்நாட்டு மக்கள் மற்றும் மாணவர்களும் மிகப்பெரிய ஆதரவை அளித்து வருவதாக, அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை ஒவ்வோர் அணியும், எந்தெந்த வகையில் மேற்கொள்வது என்ற செயல்திட்டம் குறித்து கலந்தாலோசித்ததாக தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு இல்லா தமிழ்நாட்டை உருவாக்க நாள்தோறும் போராடுவோம் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்