"சனாதன தர்மம் பற்றிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்பாரா?" - ஆ.ராசாவுக்கு ரவிசங்கர் பிரசாத் கேள்வி

x

"சனாதன தர்மம் பற்றிய பேச்சுக்கு மன்னிப்பு

கேட்பாரா?" - ஆ.ராசாவுக்கு ரவிசங்கர் பிரசாத் கேள்வி

சனாதன தர்மம் பற்றிய பேச்சுக்கு மன்னிப்பு

கேட்பாரா என்று திமுக எம்.பி.ஆ ராசாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் 25 ஆண்டுகால சாதனைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு மக்களவையில் திமுக எம்பி ஆ ராசா பேசினார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடியின் பேச்சை கேட்டு தாம் ஆச்சரியமும் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்ததாக ஆ.ராசா குறிப்பிட்டார். ஆனால் இந்த அவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கும் செயல்களுக்கும் முரண்பாடு இருப்பதாக ஆ.ராசா கூறினார்.

சந்திரயான் திட்டத்தின் மூலம் நாட்டிற்கு புகழ் கிடைத்திருந்தாலும் மணிப்பூர் விவகாரத்தை ஐரோப்பிய யூனியன் விவாதித்திருப்பதோடு இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக ஆ.ராசா குறிப்பிட்டார். இதற்கு ஆட்சேபம்

தெரிவித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இப்போது குறுக்கிட்டு பேசிய பாஜக முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் , ஆ.ராசாவுக்கு இந்தியாவின் மீது நம்பிக்கை இருக்குமானால் சனாதன தர்மம் பற்றிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்பாரா என கேள்வி எழுப்பினார்.



Next Story

மேலும் செய்திகள்