"காங்கிரசுடனும் கைகோர்ப்பேன்.. பாஜகவுடனும் கூட்டணி"புது கணக்கு சொல்லும் டிடிவி
அமமுகவின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. அதில் பேசிய டிடிவி தினகரன், அமமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள், பணத்திற்காக, பதவி வெறிக்காக துரோகம் செய்பவர்கள், எங்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என்று கூறினார். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசிய அவர், திமுகவிடம் பிரிந்து வந்தால் காங்கிரஸ் கட்சியுடன் அமமுக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்றும், பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று கூறினார். இல்லையெனில் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.
Next Story