"கோயில் நிலங்களை யார் ஆக்கிரமித்தாலும் மீட்கப்படும்" - அமைச்சர் கீதா ஜீவன்

x

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவில் திருப்பணிகளை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், திமுகவில் 95- சதவீதம் இந்துக்களே உள்ளனர். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கலைஞருடைய கருத்தே, மத உணர்வு இருக்கலாம், மதவெறி இருக்கக் கூடாது என்பதுதான். கோயில் நிலங்களை யாரும் ஆக்கிரமித்து வைத்திருந்தால் அவை உடனடியாக மீட்கப்படும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்