விஜயகாந்த் இல்லாத முதல் தேர்தல்.. பிரேமலதா வைக்கும் 2 டிமாண்ட்.. ரகசிய டாக்.. பாஜகவா? அதிமுகவா?
நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் ...
கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை மறைமுகமாக துவங்கிய தேமுதிக...
கள்ளக்குறிச்சி விருதுநகர் உட்பட குறைந்தது 4 மக்களவைத் தொகுதிகளும் , 1 ராஜ்யசபா பதவியும் பெற தேமுதிக திட்டம்....
தேமுதிகவுக்கு விஜயகாந்த் இல்லாத முதல் தேர்தல் , சரிவில் இருந்து சமாளித்து மாநிலக் கட்சி அங்கீகாரத்தை மீண்டும் பெரும் முனைப்பில் வலுவான கூட்டணியில் இணைய தேமுதிக திட்டம்...
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக பாமக உடன் கூட்டணி அமைத்த தேமுதிக , வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை ....
கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றபின் வெளியாகும் என தேமுதிக தரப்பில் தகவல்.
Next Story