முதல் அடி-கடைசி அடி-ஒரேநாளில் விஜய் எடுத்த முடிவு - கண்கலங்கும் ரசிகர்கள்..சந்தோஷத்தில் தொண்டர்கள்

x
  • அரசியல் மாநாட்டுக்கான முதல் பூஜையையும், தனது கடைசி படத்தின் பூஜையையும், நடிகர் விஜய் ஒரேநாளில் நடத்தியுள்ளார்.
  • தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் விஜய், தனது 69வது படத்தை முடித்துவிட்டு, முழுநேர அரசியலில் இறங்கவுள்ளார். அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் கட்சி மாநாட்டை முன்னிட்டு, கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் அதற்கான பூமி பூஜையை, விஜய் இன்று நடத்தியுள்ளார். அதேசமயம் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படத்திற்கான பூஜையும் இன்று நடைபெற்றுள்ளது. தன் அரசியல் வாழ்க்கையின் தொடக்கப் பூஜையையும், திரைத்துறை வாழ்க்கையின் இறுதிப்பட பூஜையையும் விஜய் ஒரேநாளில் நடத்தியுள்ளது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்