வி.சாலை டூ `விஜய' சாலை - என்ன பேச போகிறார் விஜய்... இப்போதே பதில்? ``வெற்றி' மேல் பிளிறும் யானைகள்

x

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பணிகள் சூடுபிடித்து வரும் நிலையில், மாநாட்டு திடலின் காட்சிகள் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது. இதன் பின்னணியை பார்க்கலாம் விரிவாக...

தமிழக அரசியல் களத்தில் நியூ என்ட்ரியாக உருவெடுத்துள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து தான் பரபரப்பான பேச்சுகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன..

வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டில் என்ன பேசப் போகிறார் விஜய் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், மாநாட்டுக்கான திடல் ஏற்பாடுகள் அரசியல் ரீதியாக அதிகவனம் பெற்றுள்ளது..

திடலை சுற்றி...ஆயிரக்கணக்கான கொடி கம்பங்கள் உயர்ந்து நிற்க..நூற்றுக்கணக்கான தடுப்புகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன..

அத்துடன் கோட்டை போல் அதி பிரமாண்ட நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வர...அதன் மேல் கட் அவுட் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்