புதிதாக திறந்த பாலத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பெயரை வைத்த அமைச்சர் துரைமுருகன்| Minister DuraiMurugan

x

கட்சியில் ஆடாமல், அசையாமல் இருந்ததால் பொதுச்செயலாளர் பதவியில் இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்திற்கு தளபதி மு.க.ஸ்டாலின் பாலம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெயர் சூட்டினார். குடியாத்தம் நகரில் 43.89 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலை, கெங்கை அம்மன் கோயில் செல்லும் கவுண்டன்ய மகாநதியின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அண்ணா, நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் வகித்த பொதுச் செயலாளர் பதவியில் தாம் இருப்பதற்கு, உழைப்பும் தியாகமும் தான் காரணம் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்