முதியவர்களை பரிசோதித்து அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
அதிமுகவின் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளரான டாக்டர் பசுபதி, மலைக் கிராம மக்களுக்கு மருத்துவம் பார்த்தபடியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலைக் கிராமங்களில் வாக்கு சேகரித்த பசுபதி, அங்கிருந்த முதியவர்களின் உடல்நிலையை பரிசோதித்து... ரத்த அழுத்தம் மற்றும் சுகர் போன்ற உடல் நலப் பிரச்சினைகளுக்கு தீர்வு கூறிய நிலையில், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
Next Story