ஆதவ் அர்ஜுன் கருத்திற்கு வரவேற்பு அளித்து விசிக தீர்மானம் | VCK
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் கருத்துக்கு வரவேற்பு அளித்து, அக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், வேப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன், அண்மையில் திமுகவை விமர்சனம் செய்யும் விதமாக பேசியிருந்த சில கருத்துகளுக்கு வரவேற்பு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் மாவட்ட செயலாளர் திராவிடமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கட்சி தொண்டர்கள் விருப்பத்தையே ஆதவ் அர்ஜுன் பேசியிருப்பதாக தெரிவித்தார்.
Next Story